முல்லைத்தீவு பொலிஸ் புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நேற்றைய தினம் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி கற்குழி பகுதியினையுடைய பாலச்சந்திரன் பிரதீப் (வயது -26) என்கின்ற போலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.