Homeஇலங்கையாழில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகர் தொடர்பில் வெளியான புதிய தகவல்.

யாழில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகர் தொடர்பில் வெளியான புதிய தகவல்.

Published on

யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ் நகரில் உள்ள பிரபல முதலாளியும் அவரது நகை கடையில் பணிபுரிந்த இளம் யுவதியும் நேற்றியதினம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

உயிர்ழந்த இருவரும் சுமார் ஓரிரு மணித்தியால இடைவெளியில் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவத்தில் நகைக்கடையில் பணிபுரிந்த நாவாந்துறையை சேர்ந்த 22 வயதான யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

இந்நிலையில் அவர் தற்கொலை செய்த தகவல் நகைக்கடையிலிருந்தவர்களிற்கு தெரிய வந்ததையடுத்து, மதியம் வர்த்தகர் தனது வீட்டிற்கு மதிய உணவு அருந்த சென்றபோது வீட்டிலேயே தற்கொலை செய்துள்ளார்.

நாவலர் வீதி, ஆனைப்பந்தியில் உள்ள தனது வீட்டில் வர்த்தகர் தற்கொலை செய்து கொண்டுள நிலையில் அவரது மனைவி, பிள்ளைகள் தற்போது கொழும்பில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

அதே வேளை யுவதி தற்கொலை செய்தவுடன் நகைக்கடை முதலாளியை யுவதியின் உறவுகள் கடுமையான முறையில் அணுக முற்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகரின் தற்கொலை யாழ் நகர வர்த்தகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இரண்டு மரணங்களிற்கும் தொடர்புள்ளதா அல்லது தனித்தனி சம்பவங்களா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனையின் பின்னே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this