யாழில் இருந்து காரைநகருக்கு துவிச்சக்கர வண்டியில் மது போதையில் சென்று கொண்டிருந்த இளைஞர் அவ்வழியால் துவிச்சக்கர வண்டியில் வந்த இளம் பெண் ஒருவர் மீது மோதித் தப்பி ஓடிய சம்பவம் நேற்று இரவு 8.45 மணி அளவில் யாழ்ப்பாணம் கொட்டடியில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலை ஒன்றின்அருகில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் பலசரக்கு கடை ஒன்றிற்கு வந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது விபத்துக்குள்ளான பெண் சிறு காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.