Homeஇலங்கையாழில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை வெளியான அறிவிப்பு!

யாழில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை வெளியான அறிவிப்பு!

Published on

யாழ் மாவட்டத்தில் கண்புரை(Cataract)  சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திரசிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவர்களுக்கான சத்திரசிகிச்சைகள் கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக் கண்புரை சத்திரசிகிச்சை திட்டமானது ஐக்கிய இராச்சியத்தின் யுளளளைவ சுசு நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்படுவதுடன் சத்திர சிகிச்சைகளுக்கான கண்வில்லைகளும், சத்திரசிகிச்சை நுகர்வு பொருட்களும்; மற்றும் மருந்துப் பொருட்களும் மலேசியாவைச் சேர்ந்த அலாக்கா மற்றும் ஆனந்தா நிறுவனத்தினரால் வழங்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரதேசத்தில் வசிக்கும் கண்புரை சத்திரசிகிச்சை செய்யவேண்டிய நோயாளர்களைத் தெரிவு செய்யும் இலவச கண்பரிசோதனை முகாம் எதிர்வரும் 22.07.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் இளவாலை பிரதேச வைத்தியசாலையில்; இடம்பெறவுள்ளது.

அதேபோன்று பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவினைச் சேர்ந்த கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய  நோயாளர்களைத் தெரிவுசெய்யும் இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 22.07.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பருத்தித்துறை ஆரம்ப சுகாதார மருத்துவ பிரிவிலும் நடைபெறவுள்ளது.

குறித்த முகாமில் கண்புரை சத்திரசிகிச்சைக்குத் தெரிவு செய்யப்படும் நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் திகதி பின்னர் அவர்களுக்கு அறியத்தரப்படும்.

கண்புரை சத்திரசிகிச்சைக்கு தெரிவு செய்யப்படும் நோயாளர்களை அந்தந்தப் பிரதேசத்திற்குரிய வைத்தியசாலைகளில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கும், சத்திரசிகிச்சை முடிவடைந்த பின்னர் மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து அவர்களது பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைக்கு கூட்டிச்செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் சுகாதார திணைக்களத்தினரால் இலவசமாக மேற்கொள்ளப்படும்.

எனவே கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளர்கள் மேற்படி பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு தங்களது பெயர்களைப் பதிவுசெய்யுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this