யாழில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிந்ததுடன் மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பருத்தித்துறை, கொடிகாமம் வீதி எருவன் பகுதியில் நேற்று இரவு (25) இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு உயிரிழந்த பொலிஸாரின் சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு இவர் சாரதா வீதி, சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 25 வயதான (கோ.கஜீபன்) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து படுகாயமடைந்த மற்றைய உத்தியோகத்தர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விபத்து தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.