யாழ்ப்பாணம் – உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (08.11.2023) பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் டிப்பர் மற்றும் ஹண்டர் ரக வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் இரு வாகனங்களின் சாரதிகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை பாடசாலைக்கு அருகாமையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.