இலங்கையின் மூத்த மோட்டார் பந்தய சாம்பியனான கௌசல்யா சமரசிங்க காலமானார்.
ஹொரணையில் இன்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார். பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த கௌசல்யா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கௌசல்யா ஒரு சிறந்த மோட்டார் பந்தய வீராங்கனை ஆவார், அவர் பல முக்கிய பந்தயங்களில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுள்ளார்.