மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய பல விமானங்கள் தாமதமாகியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 04/07 இரவு 06.25 மணிக்கு டுபாய் நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-225 04/08 09.15 வரை ஏறக்குறைய 15 மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டது.
மேலும், 04/08 அதிகாலை 04.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-226, 04/08 பிற்பகல் 04.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. . இதனால், விமானம் ஏறக்குறைய 12 மணி நேரம் தாமதமானது
அத்துடன் 04.07 அன்று இரவு 07.15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் நரிட்டா நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-454 04/08 அதிகாலை 01.50 மணிக்குப் புறப்பட்டது.
அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 07/04 இரவு 11.40 மணிக்கு இந்தியாவின் மும்பைக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-141 விமானமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
எனவே, 04.08 அதிகாலை 05.35 மணிக்கு மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-142 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், 04.07 அன்று காலை 7.00 மணியளவில் சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் MU-231, கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றி கடும் மழை காரணமாக மாலைதீவின் மாலே விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
அத்துடன் 04/07 மாலை 06.10 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-230 தாமதமாகி 04/08 காலை 07.33 மணிக்கு மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அவ்வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றி கடும் மழை பெய்து வருகின்றது.
இந்த விமானத்தில் 97 பயணிகள் இருந்தனர், அவர்கள் பஸ்கள் மூலம் 04/08 அதிகாலை 03.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.