புதுடெல்லி, சர்வதேச அளவில் 50 நாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் குறித்து ‘கம்பேர் தி மார்க்கெட்’ என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில், உலகின் சிறந்த ஓட்டுநர்கள் மற்றும் மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறந்த ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் ஜப்பான் உள்ளது. தொடர்ந்து 2-வது இடத்தில் நெதர்லாந்து, 3-வது இடத்தில் நார்வே ஆகிய நாடுகள் உள்ளன. இதே போல் மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் தாய்லாந்து முதல் இடத்திலும், பெரு 2-ம் இடத்திலும், லெபனான் 3-ம் இடத்திலும் உள்ளன. இந்த ஆய்வின்படி, மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.