மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவ வீரர் ஒருவர் நேற்று (23) தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
சிப்பாய் காணாமல் போனதை அறிந்த அதிகாரிகள் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் இருந்து அம்பங்கக பகுதிக்கு தண்ணீர் செல்லும் வான்கதவை மூடிவிட்டு நீர்த்தேக்கத்தை சோதனையிட்டுள்ளனர்.
அணையின் பிரதான சுவரில் இருந்து சுமார் 300 மீட்டர் கீழே உள்ள நீர்வழிப்பாதையில் உள்ள பாலத்தில் சிக்கிக்கொண்ட நிலையில் நள்ளிரவில் அவரது உடல் மீட்கப்பட்டது.
உயிரிழந்த சிப்பாய் இலங்கை 4 ஆவது காலாட்படை படைப்பிரிவின் தம்புலு ஓயா முகாமில் கடமையாற்றும் மற்றும் மொரகஹகந்த அணைக்கட்டு மற்றும் மின் உற்பத்தி நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்கிய கோப்ரல் P.H.N சம்பத் (வயது 39) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் எல்பிட்டிய, தாடிவில்லா, ரெண்டாவத்தையில் வசிப்பவர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.