எதிர்வரும் இரண்டாம் திகதி அதாவது மே மாதம் 2ஆம் திகதி விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தொழிலாளர்தினமான மே முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
எனவே அடுத்த நாள் திங்கட்கிழமை இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.