செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமூன்று STF பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் ஒன்பது வீரர்கள் காயமடைந்தனர்.

மூன்று STF பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் ஒன்பது வீரர்கள் காயமடைந்தனர்.

Published on

spot_img
spot_img

காலி முகத்திடல் மைதானத்தில் சுதந்திர தின ஒத்திகைக்காக கட்டுகுருந்த விசேட அதிரடிப்படையின் பயிற்சிப் பாடசாலையிலிருந்து சிப்பாய்களை ஏற்றிச் சென்ற மூன்று பஸ்கள் இன்று (02) காலை ஒன்றுடன் ஒன்று மோதியதில் 9 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துகள் இன்று காலை 5.30 மணியளவில் காலி வீதியில் பாணந்துறை நல்லுருவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளன.

காயமடைந்த இராணுவத்தினர் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அவர்களது நிலைமை மோசமாக இல்லை என Aa வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொதுமக்களுக்கோ அல்லது பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன ஆகியோரின் பணிப்புரைக்கமைய போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் OIC பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கர நாவுல்லா தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest articles

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

More like this