இந்தியாவின் மாகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களில் 179 குழந்தைகள் உயிரிழந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்த எடை, பிறப்பு மூச்சுத்திணறல், செப்சிஸ் மற்றும் சுவாச நோய்கள் காரணமாகவே இவ்வாறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி , ஜூலை மாதத்தில் 75 குழந்தைகளும், ஓகஸ்ட் மாதத்தில் 86 குழந்தைகளும் செப்ரெம்பரில் 18 குழந்தைகளும் உயிரிழந்துள்ளன.
70% இறப்புகள் 0-28 நாட்கள் வயதுடைய குழந்தைகள் ஆகும். பல பெண்களுக்கு ரத்த சோகை இருப்பதால் பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று தெரிவித்துள்ள மாவட்ட நிர்வாகம் விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.