மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் பல தடவைகள் லேசான மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காற்று கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வீசும், காற்றின் வேகம் மணிக்கு 20-30 கி.மீ.நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவுக்கு மிதமானதாக இருக்கும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.