மூன்று மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று (மே 17) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பின்வரும் ஆளுநர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
• லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன – வடமேல் மாகாணம்
• பி.எஸ்.எம். சார்ள்ஸ் – வடக்கு மாகாணம்
• செந்தில் தொண்டமான் – கிழக்கு மாகாணம்
கிழக்கு, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் அரச தலைவரால் திங்கட்கிழமை (மே 15) பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.