இலங்கை பாடசாலை துடுப்பாட்ட சங்கத்தின் 19 வயது பிரிவின் 50 பந்து பரிமாற்றம் கொண்ட Group-Y பிரிவின் 3 வது லீக் போட்டியில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மற்றும் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்துக்கும் இடையில் இன்று (12.12.2023) மு/வித்தியானந்த கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வித்தியானந்த கல்லூரி முதலில் களத்தடுப்பை தீர்மனித்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய புதுக்குளம் ம.வி 24 பந்து பரிமாற்றத்தில் 54 ஓட்டங்களை பெற்று அனைத்து இலக்குகளையும் இழந்தனர்.
பந்து வீச்சில் கடந்த இரண்டு போட்டியிலும் சிறப்பாக பந்து வீசிய சாருஜன் இப்போட்டியிலும் 5 இலக்குகளையும் டிலக்கன்( றொக்சன்) 3 , பவிசாந் 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய எமது பாடசாலை 9.3 ஓவர்களில் 2 இலக்குகளை இழந்து 57 ஓட்டங்களை பெற்று 8 இலக்குகளால் வெற்றி பெற்றது.
By: Pirathee