அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் இன்று (20) ஆரம்பமாகிறது.
G.C.E உயர்தரப் பரீட்சை காரணமாக பாடசாலைகளுக்கு ஜனவரி 23ஆம் திகதி முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை மார்ச் 24 ஆம் திகதி முடிவடையும் அதே வேளையில் 2023 ஆம் ஆண்டு கல்வியாண்டு மார்ச் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, 2023 கல்வியாண்டு தொடர்பான பாடப்புத்தகங்களை எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் விநியோகித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.