களுத்துறை, தேக்கவத்தையில் தனது சகோதரனின் மரணம் தொடர்பில் 14 வயது சிறுமி நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு சகோதர சகோதரிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் சகோதரி தனது மூத்த சகோதரனை கூரிய பொருளால் தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தின் போது இருவரது தாயும் வைத்தியசாலையில் உள்ள தனது கணவரை பார்ப்பதற்காக வீட்டை விட்டு சென்றுள்ளார்.
118-அவசர தொலைபேசி ஊடாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர் மற்றும் ஆரம்ப விசாரணைகளில் சகோதரி தனது சகோதரனை தாக்குவதற்கு ‘மன்னா’ கத்தியை பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
களுத்துறை, தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.