சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் ஒருவர், பெலாரஸ்- போலந்து எல்லையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெலருஸ் நாட்டில் சீரற்ற நிலை காணப்பட்டு வருகிறது. அத்தோடு இனத்துவேசம் மிக்க நாடு. பெலருஸ் போடரில் வைத்து சஜந்தன் என்ற இந்த இளைஞர் பலியாகியுள்ளதாக மட்டும், முகவர் தெரிவித்துள்ளார். முகவர்கள் இப்படி வெளிநாட்டுக்கு கூட்டிச் செல்வதாக கூறி, ஆசை காட்டி பணத்தையும் பிடுங்கி இறுதியில் ஆபத்தான நாடுகள் ஊடாக பயணத்தை மேற்கொள்கிறார்கள். கடைசியாக அவர் இறந்து விட்டார் என்றும் பெற்றோருக்கு அறிவித்துள்ளனர். இந்த பயண முகவர். என்ன நடந்தது என்பது தொடர்பாக எந்த ஒரு சரியான தகவலும் இதுவரை தெரிவவில்லை.