முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று (பிப்.24) கொண்டாடப்படுகிறது. இதன்படி, இன்று காலை 10 மணிக்கு சென்னை காமராஜர் சாலை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா உருவச் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கினார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற இலட்சியத்துடன் தமிழக மக்களுக்காக, அயராது உழைத்த ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளான இன்று அவரது சாதனைகளை நினைவுகூர்ந்து அவரது வழியில் பயணிப்போம்.” என்று கூறியுள்ளார்.