பேருவளை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சமிதா கவிரத்னவின் மனைவி கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சொந்தமான கடைக்குள் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருவளை ஹெட்டிமுல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரிடம் ஐந்து அங்குல நீளமான கத்தியும் காணப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தனிப்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்கு காரணம் என போலீசார் கருதுகின்றனர்.