செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமுன்னாள் பாடசாலை ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம்-முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது.

முன்னாள் பாடசாலை ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம்-முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது.

Published on

spot_img
spot_img

வர்த்தக நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த முன்னாள் பாடசாலை ஆசிரியையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியை மொரகஹாஹேன, மில்லேவ தம்மானந்த பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது கெப் வண்டியில் சென்ற முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வாகனத்தில் இருந்து இறங்கி ஆசிரியை இடைமறித்து அவரை கட்டியணைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது ஆசிரியை சந்தேக நபரிடம் இருந்து தப்பித்து அருகில் உள்ள வீடொன்றுக்குள் சென்றுள்ளார். ஆசிரியை பின் தொடர்ந்து சென்ற சந்தேக நபர், வீட்டில் இருந்த பெண்ணொருவரிடம் ஆசிரியை எங்கே என்று கேட்டுள்ளார்.

ஆசிரியை வீட்டுக்கு பின்னால் உள்ள மதில் மீது ஏறி குதித்து தப்பிச் சென்றதாக அந்த பெண் கூறியுள்ளார்.

இதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியை பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ததை அடுத்து மொரகஹாஹேன பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரின் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக நக கீறல் காயங்கள் உள்ளாகியுள்ள ஆசிரியை ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Latest articles

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

More like this