மாலத்தீவின் முன்னாள் அதிபர் திரு. அப்துல்லா யாமீனுக்கு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நிதி மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.சிறை தண்டனைக்கு மேலதிகமாக யாமீனுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.