அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டையின் விலையை குறைப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளது.
தமது சங்கத்தின் பணிப்பாளர் சபை இன்று பிற்பகல் கூடி இது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முட்டை விலை அதிகரிப்புக்கு நுகர்வோர் அதிகாரசபையே பொறுப்பு என அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.