விவசாய அமைச்சகமும், வர்த்தக அமைச்சகமும் இணைந்து முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை நிர்ணயம் செய்வதற்கான விலை சூத்திரத்தை தயாரித்துள்ளன.
சம்பந்தப்பட்ட இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கிய குழுவினால் இந்த விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமலி கொத்தலாவல கூறுகையில், இதுவரை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் விலைக் கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் (கோப்) எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் விலை நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் இணைந்து இரு தரப்பினராலும் தயாரிக்கப்பட்ட சூத்திரம் கோப் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்
கால்நடை தீவனத்தின் விலை குறைந்துள்ளதால், எதிர்காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.