முட்டைக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து நுகர்வோர் சேவை அதிகாரசபை புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) அறிவித்துள்ளது.
வெள்ளை முட்டை ஒன்றின் கட்டுப்பாட்டு விலை 44 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டை ஒன்றின் விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.