உடதும்பறை – மடுகல்ல பாதையில் நேற்று (07) இடம் பெற்ற விபத்தில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மேற்படி சிறுமி மரணித்துள்ளதாக உடதும்பறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த சிறுமி உடதும்பறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிட்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மரணமடைந்த சிறுமி மீமுறே பிரதேசத்தைச் சேர்நதவராகும். உடதும்பறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.