கொவிட் தொற்று மற்றும் உக்ரைன் யுத்தம் ஆகியவற்றால் கடுமையாக பல உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உணவு, எரிசக்தி, பசளை என்பன கிடைப்பதில் தட்டுப்பாடு காணப்படுகிறது. உணவு விநியோக சக்தியில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இச் சமயத்தில் ஜி20 அமைப்பின் தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றிருப்பது முக்கியமானது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நாடுகளை ஒன்றிணைத்து பணியாற்றும் ஆற்றலுடன் இந்தியா விளங்குகிறது என்று ‘நியுஸ் ஒன் எயார்’ செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
ஜி 20 வரலாற்றிலேயே இப்போது தான் முதல் தடவையாக உறுப்பினர் அல்லாத நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் ஜி 20 செயற்பாடுகளில் இணைந்து உலக விவகாரங்களில் செயற்பட முன்வந்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ள இச் செய்திச் சேவை, இப்பிரச்சினைகளுக்கு உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகளை இந்தியா பெற்றுத்தரும் என உலகம் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதேசமயம், உலகம் பல பிரச்சினைகளை சந்தித்து வரும் இப்பொழுதில் இந்திய தலைமைத்துவம் முக்கியமானது என்று பிஸினஸ் ஸ்டான்டர்ட் பத்திரிகை இந்திய தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தைக் சுட்டிக்காட்டியுள்ளது.