15 வயதுடைய சிறுமி தனது முகநூல் பக்கத்தில் இளைஞனுடன் ஏற்பட்ட தொடர்பு காதலாகி மாறிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் தம்புள்ளை பிரதேசத்தில் கனிஷ்ட கல்லூரி ஒன்றில் பத்தாம் வகுப்பில் கல்வி கற்று வந்த இந்த சிறுமி ஒருவரிற்கே நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அச் சிறுமி அவனது வீட்டிற்கு வந்த போது மனிதாபிமானமற்ற துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சிறுமி கதிர்காமம் காவல்துறையினரால் நேற்று முன்தினம் (16) மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 27 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.அத்தோடு சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இந்த சிறுமியிடம் கணவன் மனைவியாக வாழ முன்வந்தபோது அவர் மறுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் கடும் கோபமடைந்ததாக கூறப்படும் சந்தேகநபர் வெற்று பீர் போத்தலை சிறுமியின் உடலில் செருகி கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தவிர சந்தேக நபர் சிறுமியின் கழுத்தை நெரித்து ,இரத்தம் வரும் வரை மூக்கில் வாயை வைத்து சித்திரவதை செய்ததாக சிறுமி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
காவல்துறை 119 அவசர அழைப்புப் பிரிவிற்கு செய்யப்பட்ட அறிவித்தலின் பேரில் கதிர்காமம் காவல்துறை அதிகாரிகள் குழு சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டிற்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்து சிறுமியை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.