இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலை 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை மது போத்தல் ஒன்றிற்கு விதிக்கப்பட்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த விலை அதிகரித்துள்ளது.
மதுபான போத்தல் ஒன்றிற்கு 1050 ரூபாவாக இருந்த வரி 1256 ரூபாவாகவும், 1121 ரூபா வரி 1344 ரூபாவாகவும், 1309 ரூபா வரி 1576 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பீர் போத்தல் ஒன்றிற்கு அறவிடப்பட்ட 103 ரூபா வரி 124 ரூபாவாகவும் 194 ரூபா வரி 233 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.