IPL ஐத் தொடர்ந்து இந்தியாவில் Women’s IPL நடாத்துவதற்கான அணிகளின் ஏலம் இன்று நடைபெற்றது. அனைவரையும் மிரளவைக்கும் பணத்தொகைக்கு அணிகளை வாங்கியுள்ள்ளனர் இந்திய கோடீஸ்வரர்கள்.
5 அணிகளை மையமாக வைத்து நடைபெற இருக்கும் Women’s IPL இல் அதானி 1289 கோடிக்கு அகமதாபாத் ஐ மையமாக கொண்ட அணியை வாங்கியுள்ளார். இதன் மூலம் IPL இல் தவறவிட்ட இடத்தை Women’s IPL இல் கைப்பற்றியுளார்.
அதனை அடுத்து IPL அணிகளான மும்பை பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளின் உரிமையாளர்கள் தமது மாநிலங்களை மையமாக கொண்ட அணிகளை கைப்பற்றியதுடன் Capri Global லக்னோ ஐ மையமாக கொண்ட அணியை வாங்கியது.
இவ் ஏலத்தில் IPL அணிகளான சென்னை குஜராத் மற்றும் லக்னோ அணிகளின் உரிமையாளர்கள் பங்குகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் மொத்தமாக BCCIகு 4670 கோடிகளை வருமானமாக ஈட்டி கொடுத்துள்ளது Women’s IPL. இத்தொகை 2007 இல் IPL இன் ஆரம்பத்தின் போதான தொகையை விட அதிகமானதாகும். அத்துடன் IPL தவிர மற்றைய நாடுகளின் உள்ளூர் பிராந்திய T20 போட்டிகளின் மதிப்பை Women’s IPL இத்தொகை மூலம் கடந்துள்ளது.
இதற்கான வீராங்கனைகள் ஏலம் பெப்ரவரி மாதத்திலும் போட்டிகள் மார்ச் மாதத்திலும் இடம்பெறும்.