மியான்மர் நாட்டின் மோன் மாகாணத்தில் உள்ள யே டவுன்ஷிப் நகரில் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இறந்தவர்களில் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை அடங்குவதாகவும், அவர்கள் தனிந்தாய் பிராந்தியத்தின் யெபியூ டவுன்ஷிப்பிற்குத் திரும்பும் போது விபத்தில் சிக்கியதாகவும் மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.