மின் கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றாடல் நீதிக்கான நிலையம் ஆகியவற்றினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதியரசர்களான தம்மிக்க கணேபொல மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் இன்று (பெப். 13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, இலங்கை மின்சார சபை மற்றும் வழக்கின் ஏனைய பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவையின் பிரேரணையை முன்வைத்தார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கவனத்தில் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதா இல்லையா என்பது குறித்த முடிவை பெப்ரவரி 17ஆம் திகதி அறிவிக்கப்படும் என அறிவித்தது.