நாட்டில் மின்கட்டண உயர்வு தொடர்பில் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பல விலை அதிகரிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய மின் கட்டண உயர்வால் பேக்கரி பொருட்களின் விலையையும் அதிகரிக்க வேண்டிய நிலை என பல பேக்கரி உரிமையாளர்கள் பதிவு செய்கிறார்கள்.
பெரும்பாலான பேக்கரி உற்பத்திகள் மின்சாரத்தைப் பயன்படுத்துவதால், மின் கட்டண உயர்வால் நஷ்டம் ஏற்படாத வகையில் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உணவு உற்பத்திக்காக மின்சாரம் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதால் அதற்கான கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடம் அறவிட வேண்டும் எனவும் உணவக உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை மின்கட்டண உயர்வால் நகல் பிரதி(புகைப்பட பிரதி) ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண உயர்வு காரணமாக நகல் விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.