மின் கட்டணம், மூலப்பொருள் விலை உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் சிறு, குறு நூற்பாலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுமார் 600 சிறு, குறு நூற்பாலைகள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றன.
ஓ.இ. மில்கள் 5ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நூற்பாலைகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. வேலை நிறுத்தத்தால் நாளொன்றுக்கு 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி, 785 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நூற்பாலைகள் தெரிவித்துள்ளன.