செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமின்வெட்டு குறித்து இன்று வெளியான அறிவிப்பு!

மின்வெட்டு குறித்து இன்று வெளியான அறிவிப்பு!

Published on

spot_img
spot_img

எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பின் தென் மாகாணத்தில் சுமார் 10 நாட்களுக்கு இரண்டு மணித்தியால மின்வெட்டு ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சிரேஷ்ட மின்சார பொறியியலாளர் சங்கத்தின் பேச்சாளர் நந்திக பத்திரகே தெரிவித்துள்ளார்.

எனினும் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு இருக்காது என்றும் அவர் அறிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

“மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு 31% ஆக குறைந்துள்ளது. சமனல ஏரி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 16% இலிருந்து 7% ஆக குறைந்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் போதிய மழை பெய்யாவிட்டால் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் மட்டுமே மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும். அப்போது அவசர மின் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இல்லையெனில் மின்வெட்டுக்கு செல்ல நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய காலநிலை காரணமாக குறுகிய கால மின்வெட்டு ஏற்படும். மழை பெய்யாவிட்டால் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பின்னர் சமனலவெவ நீர்த்தேக்கத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது.

எவ்வாறாயினும் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு இருக்காது. தென் மாகாணத்தில் மாத்திரம் இரவு வேளையில் ஒன்றரை முதல் இரண்டு மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு மேற்கொள்ளப்படும்.நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தையும் அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் தேசிய அமைப்பில் இணைத்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இன்றைய கலந்துரையாடலில் அனுமதி கிடைத்தால் அதியுயர் மின்சாரம் கடத்தும் பாதை அமைப்பின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை சுமார் இரண்டு வாரங்களுக்கு மின்வெட்டு ஏற்படும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest articles

கணவனின் சடலத்திற்கு உரிமை கோரும் நான்கு மனைவிகள்…..

குளியாப்பிட்டிய மருத்துவ பீடத்திற்கு அருகில் இரண்டு சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலத்தை ஏற்றுக் கொள்ள...

பேருந்து சில்லில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி….

புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி பாடசாலை மாணவி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். மல்கொல்ல படிதலாவ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிலிப்பைன்ஸ் பெண்…..

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய...

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் உயிரிழப்பு…..

புத்தளம், முந்தல் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா, இம்புல்கொட பிரதேசத்தைச்...

More like this