நவம்பர் மாதத்தில் இலங்கை மின்சார சபையின் வருமானம் 35.6 பில்லியன் ரூபாவாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
ஒக்டோபர் மாதத்தில் மின்சார சபையின் வருமானம் 33.6 பில்லியன் ரூபாவாகும் என அவர் கூறினார்.
தற்போதைய கட்டண முறையின்படி வருமானம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஜனவரி மாதத்தில் நாப்தா மற்றும் டீசலுக்கு 35 பில்லியன் ரூபாவும், நிலக்கரிக்கு 38.45 பில்லியன் ரூபாவும் தேவைப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.`