யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
இந்த சம்பவம் நேற்று (05.03.2023) நடந்துள்ளது.தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது 18) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கிளைகளை வெட்டும் போது பிரதான அதிஉயர் மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.