2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பல துறைகளின் சேவைகளை அத்தியாவசிய பொது சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் ஜனாதிபதி விக்கிரமசிங்க தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் அதற்கான வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
அதன்படி,
1. மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும்
2. பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது விநியோகம்
3. தபால் சேவை
4. மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் உள்ள நோயாளிகளின் பராமரிப்பு, மற்றும் வரவேற்பு, பராமரிப்பு உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக செய்ய வேண்டிய அனைத்து சேவை, வேலை அல்லது உழைப்பு, எந்த விவரமும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.