இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது மின்சாரக் கட்டணத்தை 65% அதிகரிப்பதற்கான பிரேரணை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் குறித்த பிரேரணை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மின் கட்டண அதிகரிப்புக்கு எதிரான பொது மக்கள் மனுவை இன்று பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக மின்சார விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.