யாழ்ப்பாணம் மாவிட்டபுரம்
மிகவும் பழமைவாய்ந்த வரலாறுகளை,பெருமைகளை சுமந்து நிற்கும் இந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் முகப்பில் அமைந்துள்ள கோபுரம் நீண்டகாலமாக திருத்தப்படாமல், கவனிப்பாரற்று மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பதை பார்க்க கவலையாக உள்ளது.
இந்த நுழைவாயிலும் பல காலமாக பூட்டிய நிலையிலேயே உள்ளது. யுத்தத்தின் பின் இந்த பகுதிக்கு செல்ல அனுமதி கிடைத்தது முதல் இந்த பழைமைவாய்ந்த கோபுரத்தின் நிலை மாறவில்லை.
மாருதப்புரவீகவல்லியின் குதிரை முகம் நீங்கிய வரலாறு பெற்ற இத்தலத்தின் முகப்புக் கோபுரத்திற்கு ஏன் இந்த நிலை நீடிக்கிறது?
ஆலயம் சார்ந்தவர்கள், அறங்காவலர்கள், சமயத்தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இது குறித்த மேலதிக விபரங்களை பகிர முடியுமா?
இதனை உடனடியாக புனரமைப்பு செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்
copy from Fb