கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் மாவனெல்ல, கிரிங்காதெனிய, கெரமினியா பிரதேசங்களில் இருந்து காணாமல் போன மூன்று இளைஞர்களில் இருவரது சடலங்களைக் கண்டுபிடிப்பதற்காக நேற்று (12ஆம் திகதி) கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ரம்புக்கன, ஹுரிமலுவ பிரதேசத்தில் உள்ள பாரிய வீடொன்றுக்கு அருகில் இரு இளைஞர்களும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் அதன் மேல் கோழிக்கூடு கட்டப்பட்டுள்ளதாகவும் இந்தப் பிரிவுக்கு கிடைத்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேகாலை நீதவானின் உத்தரவின் பேரில் இந்த இடத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் தகராறு தீவிரமடைந்ததையடுத்து, அவர்கள் கடத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.மற்றைய இளைஞன் இரண்டு நண்பர்களின் மீன் தொட்டியை வெட்டியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த கொலையாளிகளிடம் இருந்து தப்பித்து மூதூர் பகுதியில் இளைஞர் ஒருவர் தலைமறைவாகி தனது உயிரை காப்பாற்றியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, கொல்லப்பட்ட ஒருவரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தக் கொலைகளுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்ய கேகாலை பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் ராஜபக்ஷ தலைமையில் ரம்புக்கன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.