பல தொழிற்சங்கங்கள் மார்ச் 01 ஆம் திகதி பாரிய கூட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
நேற்று (பிப்.16) மாலை தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, தொழிற்சங்க நடவடிக்கைக்கு பெட்ரோலியம், மின்சாரம், துறைமுகங்கள், நீர் வழங்கல் மற்றும் வடிகால், சுகாதாரம், கல்வி, வங்கி மற்றும் பல துறைகளின் ஊழியர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.