24 வயதான மலையாள நடிகை லஷ்மிகா சஜேவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான ‘காக்கா’ குறும்படத்தின் மூலம் அதிக கவனம் பெற்றவர் நடிகை லஷ்மிகா சஜீவன். நடிப்பதை தனது பொழுதுபோக்காக வைத்துக்கொண்டு ஷார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவர் பணிபுரியும் நிறுவனத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.
அதன்பிறகு மருத்துவப் பரிசோதனையில் லஷ்மிகாவின் மரணத்துக்கு மாரடைப்புதான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.