மாத்தறை வெலிகம பகுதியில் ஐந்தரை வயதான மகளை சலவை இயந்திரத்தில் போட்டு தந்தை கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் திலுஷிகா லியோன் என்ற ஐந்தரை வயது சிறுமியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி பாடசாலையில் செய்த மோசமான செயல்களுக்காக அவரது அம்மா வழக்கம் சிறுமியை போல் தண்டித்துள்ளார்.இருப்பினும், இந்த முறை அப்பா மகளுக்கு சிறந்த பாடம் கற்பிக்க வேண்டும் என எண்ணி சிறுமியை சலவை இயந்திரத்தில் போட்டுள்ளார்.
இதன்போது குழந்தை சத்தம் போட்டு அழுத போதிலும் தந்தை அந்த பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறான ஒரு நிலையில் சிறுமியின் தாய், 9 வயதான மற்றைய மகளுடன் விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரம் கழித்து, சிறுமி திலுஷிகா இயந்திரத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டாார். அப்போது, அவர் உயிரிழந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் “எங்களுக்கு எதிர்காலத்திலாவது கஷ்டம் வராது” என்று சந்தேகநபரான தந்தை தாயிடம் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், சிறுமி திலுஷிகா இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்ததாக அயல் வீட்டுக்காரர்களிடமும், பொலிஸாரிடமும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், உயிரிழந்த சிறுமியின் அக்கா தந்தை செய்த காரியத்தை கூற உண்மை வெளிச்சத்திற்கு வந்ததாகவும், இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.