யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து 09 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் வசிப்போர் அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் , புதன்கிழமை (5) தொழில் நிமிர்த்தம் அவர்கள் வெளியில் சென்ற வேளை வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 09 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வீட்டார் , திரும்பி வந்த போதே , வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு , வீட்டில் இருந்த நகைகள் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்ததை அடுத்து, இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.