பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி பயிலயும் மாணவி ஒருவர் அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
குறித்த மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை (28) இரவு பேராதனை பல்கலைக்கழகத்தின் மலலசேகர விடுதியில் சுகயீனமற்ற நிலையில் இருந்துள்ளார்.இதனை அடுத்து குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (01) காலை உயிரிழந்துள்ளார் குறித்த மாணவி மன அழுத்தத்தினால் சில காலமாக சிகிச்சை பெற்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
குருணாகல் பகுதியைச் சேர்ந்த வினோதி டி சில்வா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.