Homeஇலங்கைமாணவர்களை இலக்குவைத்து வெடிகுண்டு மிரட்டல் வவுனியாவில் பரபரப்பு

மாணவர்களை இலக்குவைத்து வெடிகுண்டு மிரட்டல் வவுனியாவில் பரபரப்பு

Published on

வவுனியாவில் மாணவர்களை இலக்கு வைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலால், பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலத்திற்கு இன்றையதினம் சென்ற இருவர் தம்மை காவல்துறையினர் என அடையாளப்படுத்தியதுடன், பாடசாலையின் காவலாளியை அழைத்து மாணவர்களை இலக்குவைத்து இரண்டு குண்டுதாரிகள் நடமாடித்திரிவதுடன், இதனால் மாணவர்களை கூட்டமாக வெளியில் நடமாடித்திரிய வேண்டாம் என்ற தகவலை கூறிச்சென்றுள்ளனர்.

குறித்த தகவலை கடமையில் இருந்த காவலாளி பாடசாலையின் அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எனினும் குறித்த விடயம் தொடர்பாக பாடசாலை அதிபரிடம் கேட்டபோது, காவல்துறையினர் என அடையாளப்படுத்திய இருவர் மேற்குறித்த தகவலை காவலாளியிடம் கூறிச்சென்றதை உறுதிப்படுத்தியிருந்தார்.

எனினும் உத்தியோகபூர்வமாக குறித்த தகவல் வவுனியா காவல்துறையினரால் தனக்கு வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த தகவல் காரணமாக நகரப் பாடசாலைகளுக்கு முன்பாக காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Latest articles

பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் மூன்று கான்ஸ்டபிள்கள் படுகாயம்

கொழும்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியப் பேரவை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களால் தாக்கப்பட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவில்...

கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

மக்கள் ஆணைக்கு இடம் கொடு என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து...

வைத்தியர் முகைதீன் கொலை வழக்கு – மரணதண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

வவுனியாவில் வைத்தியர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை...

744 சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வந்த கப்பல்

இந்திய சுற்றுலா பயணிகள் 744 பேருடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899)...

More like this