தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் கல்வி அமைச்சும் இணைந்து செயற்படுத்தும் “மாணவத் தூதுவர் நிகழ்ச்சித் திட்டம்” நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. சி.குணபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்களிடையே எவ்வாறு தலைமைத்துவ பண்பை மேம்படுத்துவது என்பது தொடர்பிலும் மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பிலான மாணவர்களுக்கான விழிப்புணர்வுகள் பற்றிய கருத்துக்களும் வளவாளர்களினால் மாணவர்களிடையே பகிரப்பட்ன.
இந் நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.