ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார மேடைகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவின் உடல்நிலையை ஆராய்ந்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.